Top News

ஈராக்கிலிருந்து எங்களால் வெளியேர முடியாது..! அமெரிக்கா அறிவிப்பு ..!



ஈராக்கிலிருந்து இராணுவ ரீதியாக வெளியேறுவதற்கான எந்த திட்டமும் அமெரிக்காவிடம் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் இருந்து அடுத்த சில தினங்கள் அல்லது வாரங்களுக்குள் வெளியேறுவதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகப்பூர்வமாக ஈராக் அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு நாடுகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் குறித்த கடிதத்தைப் பற்றி கேட்ட போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கூறியதாவது, ஈராக்கை விட்டு வெளியேறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, வெளியேறத் தயாராகும் திட்டங்களும் வெளியிடப்படவில்லை என்றும் கூறினார்.

அந்தக் கடிதம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை , அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். ஆனால் ஈராக்கை விட்டு வெளியேற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உறுதியாக கூறினார்.

மேலும், அமெரிக்காவின் கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக்கில் ஐ.எஸ்-ஐ எதிர்கொள்வதில் அமெரிக்கா இன்னும் உறுதியாக இருப்பதாக எஸ்பர் கூறினார்.

அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கும் என்று ஈராக்கிற்கு அறிவிக்கும் ஒரு உத்தியோகபூர்வ கடிதம் ‘உண்மையானது’ ஆனால் இந்த நேரத்தில் அனுப்பும் திட்டமில்லை என்று பென்டகன் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான இராணுவ ஜெனரல் மார்க் மில்லி அறிவித்துள்ளார்.

இது அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி செய்த தவறு, கடிதம் அனுப்பியிருக்க கூடாது என மில்லி கூறினார்.

Post a Comment

Previous Post Next Post