Top News

அமைச்சா் விஜயதாசவின் பிரேரணைக்கு கல்முனை மாநகர சபையில் எதிர்ப்பு ..!



- பாறுக் ஷிஹான் -

அமைச்சா் விஜயதாசவின் பிரேரணை மற்றும் அதனை உள்ளடக்கிய தேர்தல் முறைமை வெட்டு புள்ளி விவகாரத்திற்கு கல்முனை மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

புதிய ஆண்டின் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை(23) கல்முனை நகர மண்டபத்தில் மாலை 2 மணி முதல் 7 மணிவரை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமானது.

குறித்த பிரேரணை மற்றும் அதனை உள்ளடக்கிய தேர்தல் முறைமை வெட்டு புள்ளி விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தனிநபர் பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் 

அமைச்சா் விஜயதாசவின் பிரேரணை இந்தத் தோ்தலுக்கு முன்னதாக நிறைவேற்றப்படப் போவதில்லை.ஆனால் மர்ஹூம் அஷ்ரபின் முயற்சியால் 5மூ ஆக குறைக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதித்துவ கணிப்பீட்டுக்கான வெட்டுப்புள்ளி மீண்டும் எப்போதாவது 12.5% ஆக அதிகரிக்கப்படுப்படுமாயின் சிறு மற்றும் முஸ்லிம்இ தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெரிதும் பாதிக்கும் என விள்க்கி கூறினார். 

விஜயதாச ராஜபக்ஸவின் பிரேரணையானது சமகாலத்தில் மூவின மக்களும் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதில் குறியாக இருந்த பெரும்பான்மை தலைவர்களும் இருந்தனர். குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி அவர்களது அரசியல் பலத்தைக் குலைத்து அதிகாரமற்ற ஒரு சமூகமாக ஆக்குவதற்கான வேலையை கிட்டத்தட்ட எல்லா அரசாங்கங்களும் ஏதோ ஒரு விதத்தில் மேற்கொண்டதாகவே சொல்ல முடியும் என தெரிவித்திருந்தார்.

இதே போன்று குறித்த பிரேரணையை மாநகர சபை உறுப்பினர்களான ஆரிகா காரியப்பர் ,றோசன் அக்தர் ,ஆமோதித்து உரையாற்றினர்.

தொடர்ந்து கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தனது கருத்தில்

நல்லாட்சி என்ற பெயரையே கேலிக்குள்ளாக்கி விட்டுப்போன கடந்த அரசாங்கம் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்த முறைமை பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் கடுமையாக குறைவடையும் நிலையிருந்தது. இந்நிலையில் புதிய அரசாங்கமும் தேர்தல் முறை மாற்றம் பற்றி பேசத் தொடங்கி இருக்கின்றது. இது சிறுபான்மையினருக்கு சாதகமான திருத்தமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

இது இவ்வாறிருக்க, மாவட்ட ரீதியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை தீர்மானிக்கும் வெட்டுப்புள்ளியை 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம்களின் வரப்பிரசாதங்களில் கைவைக்கும் ஒரு அரசியல்வாதியாக நோக்கப்படும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கின்றமைஇ சிறுபான்மை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஒரு தனிநபர் பிரேரணை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படுவதும், அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதும் சாத்தியமில்லை என்பதற்கெல்லாம் அப்பால் சென்று இவ்விடயத்தைச் சிந்திக்க வேண்டியுள்ளது. இது பெருந்தேசியக் கட்சிகளின் 'பொதுக் குறிக்கோள்' என்ற கோணத்திலேயே இவ்விடயத்தை அணுக வேண்டியுமுள்ளது என தெரிவித்து இந்த பிரேரணைக்கான கண்டனத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.





Post a Comment

Previous Post Next Post