தற்போதைய நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்படுமாயின், நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினகள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழப்பர் எனத் தெரியவருகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இன்று 20ஆம் திகதி நாடாளுமன்றின் இறுதி அமர்வு இடம்பெற்று வருகின்றது.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.எம். இஸ்மாயில், ஏ.எல்.எம். நஸீர் உள்ளிட்ட பலருக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
#TamilCNews
https://www.facebook.com/TamilCNewsLK