Top News

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை ரீதியில் 16வது இடத்தை பெற்று சாதனை படைத்த அமீர் அப்னான்


-றிம்சி ஜலீல்-

தேசிய ரீதியாக இடம் பெற்ற இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர் யுவதிகள் போட்டியிட்டதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே வெளியாகின.

அதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலகப் பிரிவிலும் குறித்த தேர்தல் இடம் பெற்றன.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவின் சார்பில் போட்டியிட்ட அமீர் முஹம்மட் முஹம்மட் அப்னான் எனும் இளைஞன் 416 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டி சம்மாந்துறை பிரதேசம் சார்பாக இளைஞர் நாடாளுமன்ற பிரதிநிதியை தன்வசப்படுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஊடாக மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டதுடன் மொத்தமாக 426 வாக்குகள் அளிக்கப்பட்டது இதில் இரண்டாவது வேட்பாளர் 8 வாக்குகளையும் மூன்றாவது வேட்பாளர் இரண்டு வாக்குகளையும் முதலாவது வேட்பாளரான அமீர் அப்னான் 416 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

416 வாக்குகளை பெற்றுள்ள இவர் அகில இலங்கை ரீதியில் 256 பிரதேச செயலகங்களில் போட்டியிட்ட 1004 வேட்பாளர்களுள் 16 வது இடத்தை பெற்று மிகக் குறைந்த வயதில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளராக சாதனை படைத்துள்ளார்.

தனது வெற்றிக்காக உழைத்த பிரதேச விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் ஏனையோருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் எதிர் காலத்தில் இன மத பேதமற்ற சேவைகளை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கான தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வெற்றிக்களிப்பு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post