சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பினால் நேற்று மேலும் 109 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொவிட்-19 வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது.
வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 109 பேர் கொவிட்-19 வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
இதன்மூலம் சீனாவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஒட்டு மொத்தமாக 76 ஆயிரத்து 288 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
நேற்று புதிதாக 397 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Post a Comment