அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 284 ஆவது பிரிவில் (அ), (இ), (ஈ) எனும் உப பிரிவுகளில் தனக்குரித்தான தத்துவங்களின் பயனைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாவதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சாயந்தமருது பிரதேச சபையின் நிர்வாக எல்லைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் கீழே.
Post a Comment