–ஜே.எம். ஹபீஸ் –
தனது அரசியல் வாழ்வில் 40 வது ஆண்டை நிறைவு செய்யும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினறும் முன்னால் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களதி 40 வருட அரசியல் வாழ்வை முன்னிட்டு வைபவம் ஒன்றும் சினேகபூர்வ ஒன்று கூடல் ஒன்றும் நாளை 22 ம் திகதி சனிக்கிமை காலை 10 .00 மணிக்கு கட்டுகாஸ்தோட்டையில் அமைந்துள்ள பெளத்த மண்டப கேட்போர் கூடத்தில் இடம் பெற உள்ளது.
1977 ல் மைக்கப்பட்ட ஐதேக அரசின் சிரேஷ்ட அரசியல்வாதியான முன்னால் வெளி விவகார அமைச்சரும் ஐ.தே.க யின் தலைவருமான ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் பாசரையில் வளர்ந்து அரசியலுக்கு பிரவேசித்த ஹலீம் அவர்கள் மத்திய மாகாண சபையின் அமைச்சராக பல முறை கடமையாற்றியதுடன் அமைச்சர் ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களில மறைவின் பின் கண்டி மாவட்டத்தின் ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியின் ஐதேக அமைப்பாளராக நியமிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசின் தபால் மற்றும் முஸ்லிம சமய விவகார அமைச்சாகவும் அவர் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment