நாவுல, புப்பிலிய, பம்பரகஹவத்த பாதுகாப்பு வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உடும்புகளை கொன்று
அவற்றை தீயினால் வாட்டிக் கொண்டிருந்த அறுவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கொல்லப்பட்ட எட்டு உடும்புகளை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரச வனப்பகுதியில் புகை வெளியேறுவதை அவதானித்த ஏலஹெர வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் சிலர் அது தொடர்பில் சோதனையிட்டபோது, உடும்புகளை தீயினால் சுட்டுக் கொண்டிருந்த சந்தேக நபர்களை கண்டுபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், புப்பிலிய, மாலகமுவ, கவேவெல மற்றும் மனன்வத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் உடும்பு இறைச்சியை சுற்றுலா ஹோட்டல்களுக்கும், சில வர்த்தகர்களின் வீடுகளுக்கும், பல்வேறு வைபவங்களுக்கும் விநியோகிப்பதாக மேலதிக விசாரiணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று நாவுல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
Post a Comment