ஹிஜாஸ் அஹமட்
பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அடுத்த கட்ட நகர்வுகளாக, கடந்தகால அபிவிருத்திகளையும் - சமூகம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டிய தீவிர ஈடுபாட்டையும் முன்னிலைப்படுத்தியதாக த்தான்,தனது பிரச்சாரங்களை முன்னெடுக்கப்போகிறது. புதிதாக அரசியல் சித்தாந்தம் ஓதும் சில தனிநபர்களுக்குப் பதிலளித்து, அவர்களால் இதுபோன்ற சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாது என்பதையும்,
கடந்தகால சமூகச் சாதனைகள் விண்ணைத்தொட்டு நிற்கையில், இவர்களால் தமது வாசலையும் நெருங்க முடியாதென மக்களுக்கு உணர்துவதும்தான், மக்கள் காங்கிரஸின் புதிய திட்டம்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட்,
இருப்பிடத்தை விட்டு வௌியேறி, வேறு மாவட்டங்களில் வாழ்ந்த வடபுல மக்களை, தமது பூர்வீக இடங்களில் வசதியாக வாழ வைத்ததை இன்று சிலர் மறக்கத் தலைப்படுகின்றனர். அது மட்டுமல்ல, வடபுலத்தில் இயங்கிய பாடசாலைகளை புத்தளம் மாவட்டத்தில் இயங்கச் செய்ததும், வடபுலத்தவர்களாக இருந்தாலும் வசிக்கும் மாவட்டங்களின் வெட்டுப்புள்ளிகளுடன் பல்கலைக்கழகம் தெரிவாக வசதிகள் செய்ததும், வேலை வாய்ப்புக்களில் வடபுலத்துக்கும் வடமேல் மாகாணத்திற்கும் உரித்தான கோட்டாக்களை அவ்வவ் மாவட்டங்கள் பாதிப்புறாத வகையில் பெற்றுக்கொடுத்த தலைமை என்றால், அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைதான்.
வடமாகாண வாக்காளர் பட்டியலானாலும் அவர்களுக்காக, வடமேல் மாகாணத்தில் கொத்தணி வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டமை யாருடைய தலைமையில்? என்பதை, வன்னி மாவட்ட மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.
மறதிக்கும் தவறுக்கும் மத்தியில் மனிதன் படைக்கப்பட்டான் என்பதற்காக, வரலாறுகளை எவராலும் மறக்க முடியாதே! திட்டமிட்டு ஒரு சமூகத்தின் தலைமையைத் தோற்கடிக்க இடமளிக்கக் கூடாது. ஒரு சமூகத்தின் தலைமை, பிறரின் தேவைக்காகத் தோற்கடிக்கப்படக் கூடாது.
ஏனைய மாவட்டங்களில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், *பிற மாவட்டங்களின் பூர்வீக பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படுவது பற்றியும் சிந்திக்காமல் இல்லை.* கடந்த காலங்களில், மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த அரசியல் வியூகங்களைத் தவறாகப் புரிந்து, பிரிந்து சென்ற சிலருக்கு, கட்சியின் தலைவர் இம்முறை நடந்து கொள்ளவுள்ள முறைகள், சிறந்த படிப்பினையாக அமையப் போகின்றன.
எனவே, வீணான சந்தேகங்களால் எவரும் குழப்பமடையாவோ கவலைப்படவோ தேவையில்லை. 'பாதைகள் தௌிவாக இருந்தால், பயணங்கள் தடங்கலின்றித் தொடரும்' என்பதே யாதார்த்தம்.
Post a Comment