Top News

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின்பால் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்­டுள்ளார்கள்


கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பெண்களாவர். 216 பேரில் 153 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், தற்கொலை குண்டுத்தாக்கு­தல்கள் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் முழுமை பெற்றுள்ளன. குண்டுத்தாக்கு­தலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவி­ரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்ப­டுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டி­யுள்ளார்.

மேலும், இஸ்லாமிய அடிப்படைவா­தத்தினால் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லா­மிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தி­யாவில் சிறப்பு பயிற்சிபெற்ற குழுவி­னரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்­னெடுக்கப்படும். இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள­தாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரி­வித்தார்.

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறுதின குண்டுத்­தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி­யாகவுள்ள நிலையில் நிறைவுபெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்­றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்ற­த் தன்மை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தெளிவுபடுத்துகையிலே அவர் மேற்கண்­டவாறு குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடக பணிப்பாளர் ஜாலிய சேனா­ரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மிலேச்சத்தனமான ஈஸ்டர் குண்டுத்தாக்­குதல் இடம்பெற்று ஒரு வருடகாலம் பூர்த்­தியாகவுள்ளது. மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கும், 3 நட்சத்திர ஹோட்டல்க­ளுக்கும், 2 இடங்களிலும் அடிப்படைவா­திகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தாக்குதல்களை குறுகிய நேரத்­திற்குள் நிகழ்த்தியிருந்தார்கள். இந்த தாக்­குதலினால் 300இற்கும் அதிகமானோர் இறந்­ததுடன், 590இற்கும் அதிகமானோர் காயம­டைந்தனர்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றத்த­டுப்பு பிரிவினர், பொலிஸார் துரிதமான விசாரணைகளை முன்னெடுத்தார்கள். இத­னடிப்படையில் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 216 பேர் கைது செய்யப்பட்­டுள்ளனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 216 பேரில் 153 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கமைய தடுப்­புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கும், தொழிநுட்ப வசதிகளை விசாரணை நடவ­டிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கும் சர்வ­தேச பொலிஸார், ஐக்கிய அரபு இராச்சிய விசாரணைப் பிரிவு, அவுஸ்திரேலி­யாவின் பெடரல் தொடர்பு, இலங்கையின் தட­யவியல் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலதரப்பு துறைசார் நிபுணர்களின் ஆதர­வுடன் விசாரணை நடவடிக்கைகள் முன்னெ­டுக்கப்பட்டன.

பயங்கரவாதி சஹ்ரானுடன் நேரடி மற்றும் மறைமுகத் தெர்டர்பைக் கொண்டுள்ளதாக சந்தேகத்தின் பிரகாரம் சர்வதேச பொலி­ஸாரின் உதவியுடன் ஐக்கிய அரபு இராச்சி­யத்திலிருந்து 6 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்­டுள்ளார்கள். இஸ்லாமிய அடிப்படைவா­தத்தை போதிக்கும் விதத்தில் செயற்பட்டுள்­ளார்கள் என்ற அடிப்படையில் 4 மாலைதீவுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவரின் அடிப்படை உறுதிப்ப­டுத்தல் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்­ளதுடன், மிகுதி இருவர் தொடர்பான விசா­ரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்­களினதும், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களினதும் 3000ற்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன., இணையம் மூலம் மேற்கொள்ளும் உரையாடல்கள் தொடர்பில் ஆராய ஏ.எப்.பி. மற்றும் எப்.பி.ஐ. ஆகிய நிறுவனங்களின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

குண்டுத்தாக்குதல் தொடர்பான விசார­ணைகளின்போது தனிப்பட்ட சாட்சியம், விஞ்ஞான தொழிநுட்ப சாட்சியம் உள்ளிட்ட விடயங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்­டன. வணாத்தவில்லு பிரதேசத்தில் கைப்பற்­றப்பட்ட வெடிபொருட்கள், மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலை உடைப்பு உள்­ளிட்ட இரு சம்பவங்களும் ஏப்ரல் 21 குண்டுத்­தாக்குதலுடன் நேரடியாகத் தொடர்புபட்­டுள்ளன என்பது இதுவரையான விசார­ணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்­ளன.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு திட்­டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட சம்ப­வமாகும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய­தாகக் கைது செய்யப்பட்ட 42 பேரில், 21 பேர் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரா­னுடன் பல்வேறு விடயங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்.

தற்கொலை குண்டுதாரிகளினதும் அவர்­களின் உறவினர்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்குகள், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பரிசீலிக்கப்­பட்டு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வங்கிக்­கணக்குகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள­துடன், அசையா சொத்துக்களும் முடக்கப்பட்­டுள்ளன.

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய­வர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்­டவர்களிடமிருந்து ரி- 56 ரக துப்பாக்கி 3, மைக்ரோ துப்பாக்கி 1, ரிவோல்வர், 5,520,000 ரூபா பணம், 23,500 அமெரிக்க டொலர்கள்,19 பவுண் தங்கம்,113 ஸ்மார்ட் கையடக்கத்தொ­லைபேசிகள், 22 கணினிகள், 29 மடிக்க­­ணினிகள், 01 ஐ-பேட், 02 மோட்டார் கார்கள், 01 முச்சக்கர வண்டி, 01 மோட்டார் சைக்கிள் உள்­ளிட்டவை இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்­ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர் 11 விசேட குழுக்களாகப் பிரிந்து பல்வேறுபட்ட விதத்தில் விசா­ரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு கொலை (தண்டனை சட்டக்­கோவை 294), கடுங்காயம் (தண்டனை சட்டக்­கோவை 311), வெடிபொருட்களை தன்வசம் வைத்திருத்தல், ஆயுதங்களை தன்வசம் வைத்திருத்தல் மற்றும் உபயோகித்தல் தொடர்பில் சந்தேக நபர்களிற்கு எதிராக 1916.33ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச்சட்டம், 1956.21ஆம் இலக்க வெடிபொருட்கள் சட்டம், 1947.25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம், 2006.05ஆம் இலக்க பண மோசடி தடுப்புச்­சட்டம், 1979.48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு தற்காலிக விதிமுறைச்சட்டம் ஆகியவற்றின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்­டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஆணைக்குழுக்­களின் விசாரணைகள் முன்னெடுக்கப்படு­வதால் தெரிவு செய்யப்பட்ட தகவல்களை மாத்திரமே குறிப்பிட முடியும். இதனடிப்ப­டையில் 80 சதவீதமான விசாரணை நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின்பால் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்­டுள்ளார்கள். இவர்களை நல்வழிப்படுத்து­வது அரசாங்கத்தினதும், பொலிஸாரி­னதும் கடமையாகும். இதற்காகவே பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு 03 மாதகால பயிற்சி பெற்­றுள்ளார். அடிப்படைவாத போதனைகள் இடம்­பெறுவதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பொலிஸார் விசேட பயிற்­சிநெறிகளை முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்குவார்கள்.

நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மாத்திரமல்ல, பிற மதங்களை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாத தாக்குதல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் பலமான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பிரதான குற்றவாளி நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்றார்.-Vidivelli

Post a Comment

Previous Post Next Post