ஜம்மியத்துல் உலமா பதிவு செய்யப்படவில்லை அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஜயதாச

ADMIN
0

அமைப்பு சட்ட கட்டமைப்பின் கீழ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு பதிவு செய்யப்படவில்லை என்று

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று (28) இந்த என்று தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி கமிசன் இடமே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

1927 முதல் இலங்கையில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு முஸ்லிம்களின் மத விவகாரங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான மிக உயர்ந்த சபையாக கருதப்படுவதாகவும் விஜிதாச ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணையத்திற்கு தெரிவித்தார்.

அந்த அமைப்பின் மூலம் முஸ்லீம் தீவிரவாதம் செயல்படுகிறதா என்பதைக் கண்டுபிடிப்பது பாதுகாப்புப் படையினரின் பொறுப்பாகும், என்றார்.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ஆணையம் நேற்று கூடியது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top