oddamavadi ahmed irshad..
விரும்பியொ விரும்பாமலோ அமீர்
அலிதான் இருப்பதில் சிறந்த தேர்வு.
தற்போது கல்குடாவின் அரசியலை பொறுத்த மட்டில் எந்த ஒரு தனிமனிதனாலும் அமீர் அலியைத் தாண்டி எமது ஊரில் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பது ஊர் அறிந்த உண்மை !
அவரை எதிர்த்து நாமிடும் வாக்குகள் ஒப்பீட்டளவில் அவரை விட அதிகமான சேவைகளை எந்த விதத்திலும் கல்குடாவிற்குகொடுத்து விடப்போவதில்லை!
நம் கையில் விரும்பியொ விரும்பாமலோ அவர்தான் இருப்பதில் சிறந்த தேர்வு.
இவ்வாறு கல்குடாவில் இளம் சட்டத்தரணியாக உள்ள றிஸ்மி இல்யாஸ் அவருடைய முக நூலில் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியிடம் பல கேள்விகளை தொடுத்து அமீர் அலி காலத்துக்கு பொறுத்தமானவர் இல்லை என்றும் கல்குடாவில் பெண் எடுத்து திருமணம் முடித்த ஒரு இளைஞனையே கல்குடாவின் தலைவனாக்க வேண்டும் என்ற கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலே கல்குடாவில் ஜனரஞ்க வைத்திராகவும் மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள ஒருவராக உள்ள வைத்தியர் காலித் காலித் மொஹம்மட் புஹாரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்.. அமீர் அலியை நோக்கிய குறித்த சட்டத்தரணி றஸ்மி இல்யாசின் கேள்விகளான……….
01- கோறளைப்பற்று மத்தி பிரதேசசபையை பெற்றுத்தந்தாரா?
02- எங்களுடைய பறிபோன கிராம சேவகப்பிரிவுகளை மீட்டுத்தந்தாரா?
03- இப்பிரதேச மக்கள் வைத்திய சேவைபெறுகின்ற வைத்தியசாலையை தரமுயர்த்தினாரா?
04- எங்களுடைய பிதேச எல்லைக்கிராம காணிகளுக்கு உறுதியைப்பெற்றுக்கொடுத்தாரா.?
05- இப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு ஏதாவது நிலையில் வேலைவாய்ப்புக்களுக்கான கற்கைநெறிக்கான தொழில்நுட்பக்கல்லூரியை நிறுவனாரா?
06- இவைகளோடு இந்த மந்திரியை பாராளுமன்றம் அனுப்புதைவிட துடிப்புள்ள சமூகப்பற்றுள்ள நமதூர் பொண்ணை எடுத்துள்ள இளைய ஆளுமைகளை கல்குடா சமூகம் அடையாளம் கண்டு எதிர்வரும் பாராளுமன்றப்பிரதிநிதித்துவத்தில் புதிய அத்தியாயத்தை உறுவாக்கவேன்டும் என பகிரங்கமாக கல்குடா மக்களுக்கு ஒரு வேண்டு கோளினையும் விடுத்திருந்தார்.
அதற்கு தனது வசன நடை முறையில் பதிலடி கொடுக்கத்தொடங்கிய வைத்தியர் காலித் மொஹம்மட் புஹாரி......
நிச்சயமாக !
எமது பிரதேசம் சம்பந்தமாக உங்களின் கவலைகள் நியாயமானவை !
வரவேட்கத்தக்கவை!
உங்களிடம் இருந்து இவ்வாறான ஒரு பிரதேசம் சம்பந்தமான கவலையைச்சுமந்த ஏக்கம் எமது பிரதேசத்திற்கு இன்றியமையாதது !
உங்கள் போன்ற இளம் தலைவர்களின் கேள்விகள் நிச்சயம் சமூகமாற்றத்தில் பெரும் பங்களிக்கும்.
நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைகள் அனைத்தும் எவ்வளவு விரைவாக தீர்க்கப்படமுடியுமோ அவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் . அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!
அதற்காக ஹஜ்ஜுக்கு குர்பான் கொடுப்பதற்கு எடுத்துவரும் ஆடு மாடுகள் போல இலக்சனுக்கு இளந்தலைவர்கள் எனப்படுவோர் அல்லப்பட்டு கொண்டு வரப்படக்கூடாது.
எதிர்கால தலைவர் எனப்படுபவர் ..
இலக்சனுக்கு அமீர் அலியை தோற்கடிக்க வருபவராக இருந்தால் அவர் கூடினால் அமீரலியை தோற்கடிக்க மட்டுமே முடியும் ..
ஆனால் சமுகத்தை தோக்கடித்து , தானும் தோற்று , இச்சமூகத்தை விட்டு விரண்டோடுவார் என்பதே உண்மை, வரலாறும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது .
இளம் தலைவர் எனப்படுவர் ...
ஆளுமை நிறைந்தவராக ,
ஞானம் நிறைந்தவராக ,
அன்பில் திளைத்தவராக
தலைமைத்துவ ஆற்றல் நிறைந்தவராக,
வருமையை கண்டு கவலையால் அழுபவராக
இருந்தால்.!அவர் இலக்சனுக்காக மட்டும் வரமாட்டார் …
சமூகத்தின், பிரதேசத்தின் பிரச்சினைகளை தற்போதும் தன்னாள் இயன்றமட்டில் நிறைவேற்ற போராடுவார்.
அதற்காக தனியாளாகவாவது முயற்சிசெய்வார்
அதில் தோற்றாலும் அதனை நோக்கியே தன் நேர காலத்தை செழவழித்துக்கொண்டிருப்பார்
அவர்
பாட்சாலைகளின் மனங்களில் நிறைதிருப்பார்!
மதராசாக்களின் மனங்களில் நிறைதிருப்பார்!
விளையாட்டுக்கழகத்ங்களின் மனங்களில் நிறைதிருப்பார்!
விவசாயிகளின் மனங்களில் நிறைந்திருப்பார்!
மீனவர்களின் மனங்களில் நிறைதிருப்பார் !
மொத்தமாக எமது ஊர்களின் மனதில் நிறைந்திருப்பார் .
அவ்வாறு அவர் இருந்தால் அவருக்கு இந்த அமீரலியை எல்லாம் தோற்கடிப்பது அல்வா சாப்பிடுவது போலிருக்கும்.
அவ்வாரான ஒருவர் இளம் தலைவர் , ஊரில் பெண்னெடுத்தவர் இருந்தால் சொல்லுங்கள் அவருக்குப்பின்னால் செல்வதற்கும் ,அதற்காக எங்கள் நேரத்தை , காலத்தை , பணத்தை செலவழிக்க வருகின்றோம் .
நீங்கள் சொல்வது போன்ற ஆழுமையை (ஊரில் திருமனம் முடித்த ) நீங்கள் கண்டு கொண்டீர்கள் போல் உள்ளது !
யார் அவர் ! எதைக்கொண்டு அவர் மேலுல்ல அனைத்தையும் முடித்துத்தருவார் என்று நம்புகின்றீர்கள் !
அப்படி அவரால் முடியுமான எதை சமூகத்திற்க்காக, பிரதேசத்திற்காக சாதித்து காட்டியிருக்கின்றார் !
ஒரு தொழிலில் இருந்து கொண்டு குறைந்தது அவரால் சாதிக்க்கபட்ட ஒரு விடயம் சொல்லுங்கள் பார்ப்போம் .
இங்கே அவர் லோயர் என வைத்துக்கொள்வோம்!
மேற்குறிப்பிடப்பட்ட காணிப்பிரச்சினைகளுக்காக வழக்குத்தாக்கலாவது செய்திருக்கின்றாரரா ?
அது போன்று வேறு சமூக பிரதேச வெற்றிகளுக்காக , நீதிக்காக போராடியிருக்கின்றாரா ?
அந்த இடத்தில் தன்னால் ஏலுமானதை செய்யாமல் தான் எம் பி யாக வந்ததும் அனைத்தையும் செய்வேன் என்பதை எவ்வாறூ நம்புகின்றீர்கள் !
தற்போது இருக்கும் நிலையில் பொறுத்தமான தீர்வு என்ன !?
இந்த நேரத்தில் எந்த ஒரு தனிமனிதனாலும் அமீர் அலியைத் தாண்டி எமது ஊரில் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பது ஊர் அறிந்த உண்மை !
அவரை எதிர்த்து நாமிடும் வாக்குகள் ஒப்பீட்டளவில் அவரை விட அதிகமான சேவைகளை எந்த விதத்திலும் நமது ஊருக்கு தந்துவிடப்போவதில்லை !
நம் கையில் விரும்பியொ விரும்பாமலோ அவர்தான் இருப்பதில் சிறந்த தேர்வு.
மேற்குறித்த வினாக்கள் அவர் மீது நிச்சயம் தொடுக்கப்பட வேண்டும் !
ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல !
இந்னேரத்தில் அவர்மீது விடுக்கப்படும் வினாக்கள் , விமர்சனங்கள் எமது பிரதேச அபிவிருத்தியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்!
அவரை வெல்லவைக்க , எமது பிரதேசத்தால் (பள்ளிவாயல்கள் , சம்மேளனங்கள் , விளையாட்டுக்கழகங்கள்). மேலுள்ள கோரிக்கைகளை முன்வைத்து அதனை எதிர்வரும் 5வருட காலப்பகுதியில் நிறைவேற்றக்கோறவேண்டும் , அவ்வாறு அவரால் முடியாவிட்டால் தானாக விளகிப்போக அவர் வாயால் உறுதிஅளிக்க வேண்ட வேண்டும்! அதுதான் நீதி!
இலக்சன் அருகிலிருக்கும் போது கேள்விக்கனைகளை அல்லி வீசுதல் , கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு சில சேவைகளையும் பாதாலத்தில் தள்ளிவிடும் !
கூத்தாடிகள் எமது வாக்குகளை அல்லிச்செல்வார்கள் .
அவருக்கடுத்தது ஆத்மார்த்தமான ஒரு தலைவரை பெற உழைக்க வேண்டியது அவசியம் ! அதற்காக சமூக உணர்வுள்ள , எமது பிரதேச இளைஞரை இனங்கானவேண்டும் , அவர் நான் மேற்சொன்ன பண்புகளை வளர்க்க வேண்டியது அவசியம் , அத்தோடு அவர் அமீரலியை தோற்கடிப்பார் , ஊரில் வெற்றியும் பெறுவார் எனுமளவுக்கு சமூக செல்வாக்கையும் , தன்னையும் வளர்த்துக்கொள்ளும் போது தானாகவே எமது ஊர் வாரி அனைத்துக்கொள்ளும்.
இலக்சன் குர்பானிக்கான அடிமையாக அவர் இல்லாமல் , ஊரே அவர் பின்னால் ஒரு நாள் நிற்கும்!
அதுவரை பொறுத்திருப்போம்.ஒரு குழப்பமான , உலக மற்றும் மறுமைசம்பந்தமான தெளிவில்லாத ஒரு கருத்துதான் ஊரில் திருமணம் முடித்தவர்தான் தலைமை ஏற்கவேண்டும் என்பது .
ஒரு வகையில் ஜாஹிலியத்தின் மறுவடிவம் , அல்லாஹ்வின் கலாகத்ரின் மீது தொடுக்கப்படும் அடி.
அறிவிலிகள் பேசும் போது அதனை கனக்கெடுக்கெ தேவையில்லை. ! ஆனால் அறிவுடையோர் பேசுவது அறுவருக்கத்தக்கது.
திருமணம் என்பது இறை நாட்டம் அதை மாற்ற யாராலும் முடியாது!
பிரதேச வாதம் என்பது மிகக்கொடுமையானது , நாகரீக இஸ்லாமிய சமூகம் அதனைத்தூக்கிக்கொண்டு அலைந்து திரியாது !
ரசூலுல்லாஹ்வின் வாழ்வும் அதனையே காட்டி நிற்கின்றது !
வெளிஊரில் இருந்து எமது ஊரில் உள்ள தலைவரை விட சிறந்த தலைவர் வந்தால் (புள்ளிவிபர அடிப்படையில் மனிதாபிமான அடிப்படையில் சிறந்தவர் என எனக்கு உறுதியானால்) நான் அவரையே தெரிவு செய்வேன் , ஊர்க்கு எம் பி வேனும் என்ற ஜாஹிலியத்தில் நிற்கமாட்டேன்.
ரசூலுல்லாஹ் மக்காவிலிருந்த்து சென்று அன்னளவாக 400 கிலோமீட்டர் தூரத்திலுல்ல மதீனாவின் தலைவர் ஆனார்கள் , அதற்கு மதினாமக்கள் அடிப்பாடைவாதிகளாகி எதிர்ப்புக்காட்டவில்லை .திருமணம் முடிக்கும் போது மக்காவில் தான் முடிப்பேன் அதுதான் தலைமைத்துவத்திற்கு பொருத்தம் என செய்துகாட்டவுமில்லை ! மிகத்தெளிவான பாசிசம் அது!
உங்கள் பதிவில் நீங்கள் விட்ட பெரும் பிழை அது!
சரி ஊரிலிருந்து வேறு ஊரில் திருமணம் முடித்தால் ஊர்ப்பாசம் , அக்கரை போய்விடும் என சொல்கின்ரீர்கள் , அப்படியாயின் மீராவோடையை சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் முடித்தால் மீரோவோடையை மறந்தா போகிறார் !
எல்லாம் நமது ஊர் என்பீர்கள் . இந்த உலகமே ஒன்றுதான் , அனைவரும் முஸ்லீம்ள் , அனைத்து மனிதர்களும் எமது உறவுகள் தான்.
தலைமைத்துவத்திற்கு ஒருவர் பொருத்தமானவர் என இஸ்லாமிய அடிப்படையில் நீங்கள் சொல்லவேண்டுமென்றால் இவ்வாறுதான் அது இருக்கவேண்டும். அவர் குறைந்தது ,ஊரில் பென்னெடுத்து,
மாமனாரின் சொத்தில் வாழாத என்ற , இஸ்லாத்தின் அடிப்படையை ஹலாலாக செய்த ஒருவரை , இளம் தலைவராக கொண்டுவாருங்கள் பார்ப்போம் !
இவ்வாறு வைத்தியர் காலித் அரசியல் ரீதியாக தனது நிலைப்பாட்டினை சகோதரர் அமீர் அலிக்கு சாதகமாகவும், உண்மையினை கல்குடா மக்களுக்கு தெளிவுபடுத்தியவராகவும், சட்டத்தரணி றிஸ்மிக்கு கொடுத்துள்ள பதிலடியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment