தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை வீதி திறப்பு

ADMIN
0

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பிரதம அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவேக வீதியாகும்.
மாத்தறை - ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top