Top News

தொடர்ந்தும் மு.கா தலைவராக ரவூப் ஹக்கீம்.! கண்டியில் அதிரடி தீர்மானம்.


கண்டி பொல்கொல்லையில் இன்று (23) நடைபெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவு செய்யபட்டனர்.

தலைவர்- ரவூப் ஹக்கீம்

தவிசாளர்- ஏ.எல். அப்துல் மஜீத், செயலாளர்-எம்.நிஸாம் காரியப்பர், சிரேஷ்ட பிரதித் தலைவர்- எம்.எஸ்.எம்.அஸ்லம், பிரதி தலைவர் 1- ஹாபீஸ் நஸீர் அகமட்,பிரதி தலைவர் 2- யூ.டி.எம்.அன்வர், பிரதித் தலைவர் 03- எச்.எம்.எம்.ஹரிஸ், பிரதி தலைவர் 4- எஸ்.எம்.ஏ.கபூர்.

பொருளாளர்- பைசால் காசீம், தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர்- எம்.ஐ.எம்.மன்சூர், மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி- ஏ.எல்.எம்.கலீல், தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்- யு.எல்.எம்.முபீன், தேசிய அமைப்பாளர்- சபீக் ரஜாப்தீன், அரசியல் விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி எம்.பி பாறூக், சர்வதேச விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ், ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர்- எம்.எஸ்.தெளபீக், உலமா காங்கிரஸ் தலைவர்- மெளலவி எச்.எம் எம் இல்யாஸ்.

பிரதி தவிசாளர்- என்.எம்.நயிமுல்லாஹ், பிரதி செயலாளர்- மன்சூர் ஏ.காதர், பிரதித் தேசிய அமைப்பாளர்- ஏ.எம் ஜெமீல், பிரதித் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்- அலி சாஹிர் மெளலானா, மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர்- எம்.சியாட் ஹமீட், பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர்- ரஹ்மத் மன்சூர், பிரதிப் பொருளாளர்- ஏ.சி யஹியாக்கான், அரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்- ஏ.எல்.எம்.நஸீர், கல்வி, கலாசார விவகாரங்களுக்கான பணிப்பாளர்- ஆர்.எம் அன்வர், சமூக சேவைகள், அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர்- எம்.எஸ் உதுமாலெப்பை, இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர்- ஏ.எல் தவம்.

செயற்குழு செயலாளர்- ஏ.ஜெ.எம் ரிஸ்வி, பேராளர் மாநாடு செயலாளர்- எம்.எச்.அப்துல் ஹை, மசூரா குழு செயலாளர்- யூ.எம் வாஹீட்





Post a Comment

Previous Post Next Post