ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் அதிரடி தீர்மானம்.

ADMIN
0


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சமகி ஜன பலவேகய அமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடன் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

இந்தத் தீர்மானத்தை எடுத்ததன் மூலம் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

பிரதானமாக முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கட்சி என்ற வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான குழுவினருடன் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உண்மையான தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான உருவாக்கப்பட்ட கூட்டணியாக சமகி ஜன பலவேகய அமைப்பை குறிப்பிடலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top