”திருடர்களை பிடிக்க வேண்டுமென்பதற்காகத்தான் அன்று
எமது ஆட்சியமைந்தவுடன் நான் விமான நிலையத்தை மூடுமாறு கூறினேன்.
அன்று அப்படிச் செய்திருந்தால் திருடர்களை பிடித்திருக்கலாம்.
திருடர்களை எமது ஆட்சி பிடிக்கவில்லை.அதன் துன்பத்தை இன்று அனுபவிக்கிறோம்.
எமது பக்கத்தில் இருந்த பௌசியை கைது செய்து ஒரு மணிநேரமாவது தடுத்து வைத்திருக்கலாம்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.நான் மற்றவர்களை போல ஊழல் மோசடி செய்து சிறைக்குச் செல்லவில்லை.
திருடர்களை பிடிக்க முயன்று சிறை சென்றேன்.
இந்த சபையில் உள்ளவர்கள் மட்டுமல்ல அவர்களின் மனைவிமாருடனும் நான் தொலைபேசியில் உரையாடியுள்ளேன்.
இந்த நாட்டிலோ அல்லது உலகிலோ எந்த இடத்திலும் எனது பெயரில் ஒரு பேர்ச் காணித்துண்டு கூட கிடையாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.ஆனால் இன்று எனக்கு அநீதி நடந்துள்ளது.”
விசேட சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி ரஞ்சன் ராமநாயக்க எம் பி சபையில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
சிவா ராமசாமி
Post a Comment