நாட்டுக்கு நாடு பரவும் கொரோனா வைரஸ் இத்தாலியில் நான்காவது நபரும் பலி

ADMIN
0

இத்தாலியில் கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் பலியாகியுள்ளார்.

இது இத்தாலியில் 4 வது மரணமாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான லோம்பார்டி பகுதியில் உள்ள 84 வயது நபர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குறித்த வலயத்தில் உள்ள 11 நகரங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதோடு 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என்று பிரதமர் கியூசெப் கான்டி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடாக இத்தாலி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top