இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் என்பது இளைஞர்களுக்குரியது. அதில் அரசியல் வங்குரோத்துடையவர்கள் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது. அதனை வழிநடாத்தி வெற்றி பெறக்கூடிய ஆளுமையும், திறமையும் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.
இளைஞர் பாராளுமன்றத் தேர்தலை தாங்கள் சார்ந்த கட்சி அரசியலாக மாற்றி, தங்களின் சுயநல அரசியலுக்காக இளைஞர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி வாக்களிக்க இருந்தவர்களையும் வாக்களிக்காமல் செய்த பெறுமை அந்த வங்குரோத்து அரசியல்வாதிகளைச் சாரும்.
அது மாத்திரமல்லாமல் இளைஞர்களுக்கு ஆரம்பத்தில் வாக்குறுதிகளை வழங்கி தங்களின் அரசியல் இருப்புக்காக கொடுத்த வாக்குறுதிகளை மீறிய நயவஞ்சக அரசியல்வாதிகளுக்கும் இத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டாகும்.
நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலை தங்களின் அரசியல் இருப்புக்காகவும், சுயநலத்திற்காகவும் இளைஞர்களை பயன்படுத்திய அரசியல் வங்குரோத்துகாரர்கள் தோல்விடைந்தனர்.
தன்னம்பிக்கையோடு, இளைஞர்களை மாத்திரம் உட்படுத்தி, இளைஞர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் பயன்படுத்தியவர்கள் வெற்றியடைந்தனர்.
தங்களின் அரசியல் வங்குரோத்துக்காக இளைஞர் பாராளுமன்றத் தேர்தலை பயன்படுத்தியவர்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் தமக்கு எந்த அளவில் செல்வாக்கு உள்ளது என்பதை.
அரசியல்வாதிகள்தான், பிரதேசவாதமும், இனவாதமும் பேசுகின்றார்கள் என்று பார்த்தால் இப்போது ஒரு சில இளைஞர்களும் பிரதேசவாதம் பேச ஆரம்பித்து விட்டனர்.
இறுதியில் தேர்தலில் வென்றவர்கள் இளைஞர்கள் தோற்றவர்கள் அரசியல் வங்குரோத்துகாரர்கள்.
Post a Comment