அப்ரிடி ரசிகர்களுக்கு வழங்கிய அதிரடி வாய்ப்பு நல்ல பெயருக்கு பரிசு..

ADMIN
0


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் அதிரடி வீரர் சஹிட் அப்ரிடி மற்றும் அவரது மனைவிக்கு 5வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

சஹிட் அப்ரிடிக்கு ஏற்கெனவே 4 மகள்கள் உள்ள நிலையில், அவரது மனைவி நாடியா ஐந்தாவதாக கர்ப்பம் தரித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

அப்ரிடி பிறந்த குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, ஏற்கெனவே முதல் 4 மகள்களுக்கு ஏ ((A)) எழுத்தில் ஆரம்பிக்கும் வகையில் பெயர் வைத்தது போல இக்குழந்தைக்கும் பெயர் வைக்க விரும்புவதாகவும், ஆதலால் நல்ல பெயரை தெரிவிப்போருக்கு பரிசு வழங்க போவதாக அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்கள், பல பெயர்களை அவருக்கு முன்மொழிந்து வருகின்றனர்.

அப்ரிடியின் மகளுக்கு பெயர் வைக்க ரசிகர்களுக்கு சந்தர்ப்பம்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top