முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் பல முயற்சிகளுக்கு மத்தியில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுத்து மக்களின் நன்மை கருதி திறக்கப்பட்ட லங்கா சதொச கிளைகளை மூடுவதற்கு தற்போதுள்ள புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நகரங்களில் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் கிளைகளை கிராமங்கள் வரை கொண்டு சென்று இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் அரச நிறுவனம் ஒன்றை கிராமத்திற்கு கொண்டுவருவதன் கஷ்டங்களை பொருட்படுத்தாது றிஷாட் பதியுதீன் பாரிய பணியைச் செய்தார்.
ஆனால் இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள 14 சதொச கிளைகளைப் பூட்டுவதற்கு புதிய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதையிட்டு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சரின் செல்வாக்கை குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
ஆகையினால் கட்சி அரசியலுக்கு அப்பால் புதிய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. ஒரு கிராமத்திலுள்ள அரச வளத்தை இல்லாமல் ஆக்குவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
Post a Comment