தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இரண்டாம் கட்டமாக, மேலும் 201 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய பொலன்னறுவை, கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 144 பேரும், மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 57 பேரும், இவ்வாறு வீடு திரும்பியுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
குறித்த நபர்கள் இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து இலங்கை வந்தவர்களாவர்.
நேற்றையதினம் (24) முதற் கட்டமாக புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பேரும், பொலன்னறுவை, கந்தக்காட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 108 பேரும் வீடு திரும்பியிருந்தனர்.
14 நாள் தனிமைப்படுத்தல் கால எல்லைக்கு உட்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களுக்கு தொடர்ந்து இரு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment