நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டாலும் 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
குறித்த வேலை வாய்ப்பு திட்டத்துக்கான நியமனக் கடிதங்களை விரைவாக விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதற்காக ஞாயிற்றுக் கிழமைகளிலும் தபால் சேவை என முன்னெடுக்கப்படும் என கருதுவதாகலும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள வேலை வாய்ப்பு திட்டம், நேர்காணல்கள் மற்றும் நியமனங்கள் என்பன குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்ட பின்னரே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தின் அடிப்படையில் 42 ஆயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதுடன், இவற்றில் 15 ஆயிரம் நியமனக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், மிகுதி நியமனக் கடிதங்களை விரைவில் அனுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment