மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் 52 மதுபான போத்தல்களை ஆட்டோவில் எடுத்துச்சென்ற இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் மது விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எனினும், மஸ்கெலியாவிலுள்ள தோட்டப் பகுதியொன்றில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் வைத்து ஆட்டோ சுற்றிவளைக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேசக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களும் ஒப்படைக்கப்படும் என்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்-
Post a Comment