கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாகாணம், மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை

ADMIN
0

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி கல்வி அமைச்சின் 2019 ஆண்டுக்கான க.பொ.த. (உ/த) பரீட்சை தரப்படுத்தலில் மாகாணம், மாவட்டம் ஆகிய இரண்டிலும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

இத்தரப்படுத்தலில் வர்த்தகப் பிரிவு தமிழ், சிங்கள பிரிவில் மாவட்டத்தில் நான்காம் இடத்தையும், மாகாண மட்டத்தில் ஒன்பதாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 61 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இதேவேளை கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியானது 2019 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நான்கு மருத்துவ பீடம் உட்பட 35 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top