ஹஸ்பர் ஏ ஹலீம்
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நேற்று (14) மாலை இடம் பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடலின் போது குறித்த கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஆர்.எம்.அன்வர் முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ,கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
Post a Comment