கொரோனா வைரஸ் விவகாரத்தை இந்த அரசு இன்னும் சீரியஸாக எடுக்கவில்லை என முன்னாள் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் தாந்தோன்றித்தனமான தீர்மானங்கள் காரணமாக இந்த நாட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊரடங்கு சட்டத்தை முன்னதாகவே அமுல்படுத்தி இருந்தால் அச்சுருத்தலை இன்னும் குறைத்திருக்கலாம் என கூறிய அவர் ஷட் டவுன் முறையை பயன்படுத்தி இருந்தால் நாட்டில் வைரஸ் அவதானத்தில் இருந்து பாதுகாத்து இருக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
தற்போதய நிலமையை இந்த அரசு விளையாட்டுக்கு எடுத்துகொண்டு அரசியல் சூதாட்டில் ஈட்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment