ரன்தெனிகலை தேசிய மாணவச் சிப்பாயகள் படையணி பயிற்சி முகாமில், தனிமைப்படுத்தபட்ட நிலையில் உள்ள யூசுப் முப்தி, தனது தாயைப் பற்றி தற்போது புத்தகம் எழுதி வருவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
நான் இங்கு 14 தங்கியிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அல்லாஹ்வின் உதவியுடன் நான் ஆரோக்கியத்துடன் உள்ளேன். இங்குள்ளவர்களினால் சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறேன்.
எல்லோருடைய பிராத்தனைக்கும் நன்றி.
எனது தூய் குறித்து, புத்தகம் எழுத வேண்டுமென நீண்டநாள் கனவாக இருந்தது.
தற்போது அந்தக் கனவை நிறைவேற்ற வாய்ப்புக் கிட்டியுள்ளதாக நினைக்கிறேன். ஆம், எனது தாயைப் பற்றி புத்தகம் எழுத ஆரம்பித்துவிட்டேன்.
நேரம் பெறுமதிக்கது. அந்தவகையில் கிடைத்துள்ள நேரத்தை பயன்படுத்தி தாயைப் பற்றிய புத்தகத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன் என்றார்.
Post a Comment