Top News

பாராளுமன்றத்தை உடனடியாக, கூட்டவும்.



(ஆர். விதுஷா )


நாட்டு மக்களுக்கு முதலிடம் கொடுத்து அரசியல் வேறுபாடுகளை மறந்து கொரோனா வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன, பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார்.


உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவேற்றம் செய்து இருக்கும் எரான், மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,


நோய் நிலைமை என்பது இன மத பேதங்கள் இன்றி அனைவருக்கும் பொதுவானதாகும். ஆகவே அதனை முறியடிப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியமானதாகும்.


அதனைக் கருத்திற்கொண்டு இந்த வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராடுவது தொடர்பில் ஒன்றிணைந்து தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கேட்டுக்கொள்கின்றேன் .


இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து எமது நாட்டை காப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய தயாராக இருக்கின்றோம் .


ஆகவே நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் அனைவரும் சுகாதார அதிகாரிகளுடைய அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.


அத்துடன் நாட்டு மக்களின் நலனுக்காக சேவையாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post