கடந்த வருடம் ஏப்ரல் 21 நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதிகள் குழு கண்டி எசல பெரகரா மற்று சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக ஜனாதிபதி ஆணக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவின் விசேட அதிகாரி லலித கீதாஞ்சன திஸானாயக அவர்கள் 04/21 குண்டு வெடிப்பு தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று மேற்கண்ட சாட்சியத்தை வழங்கினார்.