வழமை போன்று நீர்கொழும்பு அன்சார் ஹோட்டல் திங்கட்கிழமை, 9 ஆம் திகதி இரவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு 2 வேன்களில் சிங்கள மொழி பேசியபடி வந்துள்ளவர்கள் ஹோட்டலுக்குள் இருந்து மது அருந்தலாமா என வினவியுள்ளனர்.
நாட்டில் மதுபானம் அருந்த அனுமதி இருப்பதால் தங்களை ஹோட்டலினுள் மதுபானம் அருந்த அனுமதிக்குமாறு தகராறு செய்துள்ளனர்.
அதற்கு ஹோட்டலில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்சார் ஹோட்டலுக்குள் வைத்து, வந்தவர்கள் மதுபானம் அருந்த முயன்றபோது, ஹோட்டல் உரிமையாளரின் சகோதரரான றிஸ்வான் மதுபானம் அருந்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மதுபானம் அருந்த முயன்றவர்கள், றிஸ்வானை தாக்கியுள்ளனர். கத்தியினால் குத்தியுள்ளனர்.
தனது தம்பி தாக்கப்படுவதை கண்ணுற்று அதை தடுக்க முயன்ற அன்சார் ஹோட்டல் உரிமையாளர் ஜிப்ரியும் இதன்போது கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார்.
அத்துடன் அன்சார் ஹோட்டலில் பணியாற்றிய, கெக்கிராவையைச் சேர்ந்த அஸீஸ் என்பவர் மீதும், இதன்போது கத்தியால் குத்தியால் குத்தியுள்ளனர். இதன்போது அவரது குடல் வெளியே வந்துள்ளது.
இதையடுத்து வேனில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். அதில் ஓரு வேனை பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(மேலதிகத் தகவல்கள் கிடைத்தால், பதிவேற்றம் செய்யப்படும்)
Posted in: செய்திகள்
Post a Comment