Top News

இலங்கை பெண்ணிற்கு கொரோனா உறுதியானது!


உலகினை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணொருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த பெண், இத்தாலியில் வசிப்பவர் என்றும் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வைரஸினால் பாதிக்கப்பட்டவர் லோம்பார்டியில் உள்ள ப்ரெசியாவில் வசிக்கும் 46 வயதுடைய பெண் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் 18பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் காய்ச்சல், தடிமன் போன்ற நோய் இருப்பவர்களும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகமூடி அணிவது நல்லது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை உலக சுகாதார நிறுவனம் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் உலகளவில் 53 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 85,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் தற்போது 2,924 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post