இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான நகர்வையும்மேற்கொள்ளாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால நீடிப்பு கோரியதாக வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
வைகோ வௌியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம்தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அரசாங்கத்தின் கீழ் தமிழர்களுக்குஅச்சுறுத்தல் காணப்படுவதாகவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கஐக்கிய நாடுகள் சபை முன்வரவேண்டும் எனவும் அவர் தமது அறிக்கையினூடாக கோரியுள்ளார்.
Post a Comment