பாறுக் ஷிஹான்-
கல்முனைமாநகர சபைக்குட்பட்ட மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களில் கிருமிநீக்கம் செயற்பாட்டினை மாநகர சபையின் தீயணைப்பு படை சுகாதார பிரிவு முன்னெடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (22) காலை முதல் குறித்த கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்பூட்டலுடன் இச்செயற்பாடு ஆரம்பமானது.மாநகரப்பகுதியின் மத்திய பகுதி மத்திய பேரூந்து நிலையம் பஸ் தரிப்பு நிலையம் கடைத்தொகுதிகளில் வீதி வீதியாக கிருமிகளை நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் வழிநடத்தலில் கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மாநகர சபையில் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமான தகவல்கள், ஆலோசனைகளை பொது மக்கள் பரிமாறிக் கொள்ள முடியும்.இத்தகவல் மத்திய நிலையமத்திற்கென 0672059999, 0767839995 எனும் அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது
Post a Comment