கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க இலங்கை செல்லவும் இங்கிலாந்து வெளியிட்ட அதிரடி தகவல்.

ADMIN
0

கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கான சிறந்த இலக்காக இலங்கையை இங்கிலாந்து தெரிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸின் அச்சத்தைத் தவிர்க்க இலங்கையை பொருத்தமான பயண இடமாக கொள்ள முடியும் என இங்கிலாந்து Travel Consultant பரிந்துரைக்கிறார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக, வெப்பமான காலநிலையைக் கொண்ட ஒரு நாட்டுக்கு ஒரு சுற்றுலா அல்லது பயணிப்பது ஏற்றது என்று முன்னணி பயண ஆலோசனை நிறுவனமான பிசி ஏஜென்சியின் தலைமை நிர்வாகி பால் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி ஊடக வலையமைப்புகளில் ஒன்றான SKY நியூஸுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

மருத்துவ ஆலோசனைகளின் படி எந்த நாடும் 29 செல்சியல் வெப்பத்துக்கு அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் என்னைக் கேட்டால் சுற்றுலா செல்ல இலங்கை அல்லது கரீபியன் தீவுகளுக்கு செல்வேன் என மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top