-எப்.முபாரக்-
நீர்கொழும்பு முஸ்லிம் மகனுடைய ஜனாஸாவை தகனம் செய்ததானது அனைத்து முஸ்லிம் மக்கள்
மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் இன்று(31) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நீர்கொழும்பில் மரணித்த சகோதரனை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டுமென தான் பிரார்த்திப்பதோடு, இவருக்காக அனைத்து உறவுகளும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இந்த Covid19 தொற்றினால் உலக அளவில் முஸ்லிம்கள் மரணித்துள்ளனர், அவர்கள் உரிய இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் எமது நாட்டில் ஏன் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என அவர் கேள்வி எழுப்பியுள்ளர்.
இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இது விடயத்தில் முஸ்லிம் மார்க்க தலைமைகள் அரசாங்கத்தோடு பேசி தக்க முடிவை எடுக்க வேண்டுமென பொது மக்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment