சர்வதேச மகளீர் தினம் இன்று (08)
கொண்டாடப்படுகின்றது.
1908 ஆம் ஆண்டு பெண்கள் தொழில் செய்யும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட பேரணியை தொடர்ந்து தேசிய மகளீர் தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் அந்த நாள் சர்வதேச மகளீர் தினமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் 1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையும் குறித்த நாளை சர்வதேச மகளீர் தினம் என அங்கிகரித்தது.
சில நாடுகளில் இன்றைய நாள் தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெண்களுக்காக பல்வேறு நிகழ்வுகளையும் நடத்துகின்றன.
பெண்களின் உரிமைகளுக்காக உலகலாவிய ரீதியில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்துவருவதால் தற்போது பெண்களுக்கு முன்னரை விட அதிக உரிமைகள் கிடைத்துள்ளன.
ஆனால் இலங்கையில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் போதாது எனவும் அதற்காக தொடர்ந்தும் போராடி வருவதாகவும் மகளீர் அமைப்புகள் சில தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டி தருவதில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது
.
Post a Comment