பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா

ADMIN
0 minute read
0

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான நடீன் டோரிஸிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனை அவரே தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய இராஜ்ஜியத்தில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வடக்கு அயர்லாந்தில் 16 பேரும், வேல்ஸில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த சூழலில்தான் நடீன் டோரிஸிக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top