புத்தளம் பொலிஸ் பிராந்தியத்தின் 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவுகளிலும் இன்று (18) மாலை 4.30 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனைத் தவிர, நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment