Top News

UPDATE கொரோனா வைரஸ் - இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி



கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2978 ஆக அதிகரித்துள்ளது.




சீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.




சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் நிலை குலைந்திருக்கும் நாடுகளில் முக்கியமானது இத்தாலி.

இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகி விட்டனர்.




இதன்மூலம் அங்கு பலி எணணிக்கை 2,978 ஆக அதிகரித்து இருக்கிறது. 35,713 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




கொரோனா தாக்குதலுக்கு ஒரே நாளில் 475 பேர் பலியானது இத்தாலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post