உயிரிழந்தவரோடு தொடர்பிலிருந்தவர்கள் உட்பட 67 பேர் முகாமுக்கு அனுப்பி வைப்பு

ADMIN
0


கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இறுதியாக உயிரிழந்த மாணிக்கக் கல் வர்த்தகரின் உறவினர்கள் இருவருக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவரோடு தொடர்பிலிருந்தவர்கள், பணியாற்றியவர்கள் உட்பட இரத்னபுர - பெல்மதுல்ல பகுதிகளைச் சேர்ந்த 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் இப்பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருந்ததோடு அங்கு இடம்பெற்ற பரிசோதனைகளின் பின் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்மதுல்ல மற்றும் முத்துவ பகுதிகளில் பல குடும்பங்கள் இவ்வாறு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top