Top News

பணமில்லையா…அப்படியென்றால் செத்தொழி..


அமெரிக்காவில் வசித்து வருகின்ற அமெரிக்க வாழ் மலையாளியான மீனா டி பிள்ளை கூறுவதனை முதலில் கேளுங்கள்..அப்புறம் நாங்கள் பேசிக் கொள்ளலாம். 

“அமெரிக்காவில் கொவிட்1-9 டெஸ்டுக்கு ரூபா. மூன்றரை லட்சம். சிகிச்சைக்கு 16 லட்சம் வரை தேவை. இதிலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் நான் கூறுவேன். நமது பொதுக் கல்வி நமது பொதுச் சுகாதார பராமரிப்பு முறை இதையெல்லாம் நமது கண்ணின் மணி போல பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த நாடு எனக்கு கற்றுத் தந்த மிகப் பெரிய பாடம். இங்கு அமெரிக்காவில் நாம் காய்ச்சலிலும் இருமலிலும் எவ்வளவு சுகவீனம் அடைந்த போதிலும் மருத்துவமனையை தொடர்பு கொண்டால் அவர்கள் கூறுவது நீங்கள் இங்கு வர வேண்டாம். கொவிட்டுக்கு மருந்தில்லை. நீங்கள் வீட்டிலிருந்து கைகளை கழுவுங்கள். மற்றுமுள்ள கிருமிநாசினி வழி முறைகளை பின்பற்றுங்கள். இங்கே வந்து ஒன்றும் ஆகப் போவதில்லை. மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டால் மட்டும் இங்கே வந்தால் போதும் என்கிறார்கள். பெரும்பான்மையான சாதாரண அமெரிக்க குடிமகன்கள் முடிந்த வரை மருத்துவமனைக்கு செல்ல மாட்டார்கள். காரணம் மருத்துவக் காப்பீடு இருந்தாலும் ஒரு பகுதி தொகையை நம்மிடமிருந்து பெற்று விடுவார்கள். சரியாக சொல்வதென்றால் இங்குள்ள சுகாதாரம் நல்வாழ்வு என்பதே காப்பீட்டு நிறுவனங்களின் குத்தகையில் அவர்களது கைகளில்தான் உள்ளது.






இன்றைய முதலாளித்துவ உலகின் மா பெரும் மாஃபியா…..மனித குலத்தின் மகத்தான அவலம்…..மனித உசிருகளை வைத்து பில்லியன் டொலர்களில் ஆடுகின்ற மெகா சூதாட்டம். இதுதான் யூ எஸ் என்று செல்லமாக நம்மால் சுருக்கி அழைக்கப்படுகின்ற அமெரிக்கா. 






மீனா டி பிள்ளை இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைத் தளங்களில் பரவி கண்ணீரையும் விழிப்பையும் வரவழைத்துள்ளது. தனியே கோப்ரேட் நிறுறவனங்களின் கைகளில் சிக்கியுள்ள அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளின் சுகாதாரத்துறை இப்படித்தான் காசுள்ளவன் மட்டுமே வாழலாம். மற்றவர்கள் என்ன எழவானாலும் பரவாயில்லை என்ற நிலையில் இருக்கின்ற அமெரிக்காவைத்தான் நாம் பெத்தாம் பெரிசாக கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். அமெரிக்காவைப் பற்றி எல்லை கடந்து புகழ் பாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவ்வளவுதான் அமெரிக்கா. 






இன்றயை நிலையில் அமெரிக்காவில் எல்லை கடந்து சென்று கொண்டிருக்கின்ற கொரொனா வைரசின் ருத்ர தாண்டவத்துக்கு அமெரிக்காவின் இந்த தனியார் மருத்துவ நிலைதான் பிரதான காரணம். சாதாரணமாக கொவிட்-29 தொறற்றியிருக்கின்றதா இல்லையா என்பதனை பரிசோதித்துப் பார்க்கவே இநதிய மதிப்பில் மூன்றரை லட்சங்கள் தேவை…தொற்றுக்குள்ளாகி உறுதியானால் சிகிசசை பெற வேண்டுமெனில் அதற்கு ஒரு பதினாறு லட்சமெனில்…தலை சுற்றுகின்றது. 






காசிருக்கின்றவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் கடவுள் கண்ணைத் திறப்பார். அங்கே மருத்துவத்தைப் பொறுத்த வரை கோப்ரேட்டுகளே கடவுள்…தெய்வம்..ஜீசஸ் கந்தா கடம்பா கதிர்வேலா எல்லாமே. இலங்கையில் நிலைமை வேறு…இலவச மருத்துவத்தின் அருமை இதுதான். தொற்றுக்குள்ளாகி இருக்கின்றோம் என்று சந்தேகப்ப்ட்டால் முன்னே வாருங்கள் நாங்கள் உங்களை தாங்கிக் கொள்ளுகின்றோம் என்கின்றது அரசு. 






சுத்துப்பட்ட அத்தனை பரிசோதனைகளையும் செய்து தேவைப்பட்டால் மேலதிக சிகிச்சைகள் வழங்கி கொரன்டின் செய்து…என அத்தனையையும் செய்யக் காத்திருக்கின்றது அரசாங்கம். ஆனால் என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்..எனக்கு கொவிட்-19 இருப்பது மாதிரி தெரிகின்றது என்று தானாக முன் வந்தாலும் வீட்லேயே கிடந்து ஒழிஞ்சு போ என்று துரத்தியடிக்கின்றது அமெரிக்க அரசு. அப்படியும் இல்லை என்னை பரிசோதியுங்கள் எனக்கு ஏலாமலிருக்கின்றது என்று அடம் பிடித்தால் “துட்டிருக்கா என்பார்கள். இல்லையே பாஸ் என்றால் “அப்படியே ஊட்டான்ட போயி செத்துத் தொல” என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். இதுதான் அமெரிக்கா. ஒரு வகையில் இதனைப் பொறுத்த வரையில் நாமெல்லாம் இலங்கயைர்களாக லக்கிதான். 






அமெரிக்காவில் இந்த காசு கக்கிசத்துக்காக மணியில்லாத மனிதர்கள் பரிசோதனைக்கு செல்லாமல் சிகிச்சைக்குச் செல்லாமல் அசால்ட்டாக வீட்டிலேயே இருக்கின்றார்கள். இதுவும் ஒரு பிரதான காரணம் அமெரிக்காவில் வகை தொகையில்லாமல் கொவிட்1-9 தொற்றாளர்கள் அதிகரித்தற்கும் அதன் நிமித்தம் செத்தொழிந்து கொண்டிருப்பதற்கும். அமெரிக்க போன்ற நாடுகளில் மனிதர்களை விட முக்கியம் மணி. ஏனெனில் மருத்துவத்தினை தனியார் துறையினரே அங்கு தீர்மானிக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்த வரை மருத்துவம் மருந்துகள் எல்லாமும் சுகப்படுத்தவதற்காக அல்ல…






அது லாபஙம் மட்டுமே புரளுகின்ற உலகின் நம்பவர் வன் ஒரு மெகா பிஸினஸ்.






கிண்ணியா சபருள்ளாஹ்


2020-04-07

Post a Comment

Previous Post Next Post