Top News

கர்ப்பிணித் தாய்மாருக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்.


( மினுவாங்கொடை நிருபர் )


நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், 8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் குறித்த பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்களில், குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணித் தாய்மார்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post