Top News

கந்தளாயில் கொரோனா கோடு என்னதான் நடக்கிறது..??

 
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் கூடும் பொது இடங்களில் பொது மக்களை கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு சம இடைவெளிக்கான கோடுகள் மதிப்பிடும் பணிகள் இன்று (5) கந்தளாயில் இடம்பெற்றது.

கந்தளாய் பிராந்திய சிவில் பாதுகாப்பு படையினரும்,கந்தளாய் வாழ் இளைஞர்களும் இணைந்து இந்த சம இடைவெளிகளை பேணும் வகையிலான கோடுகள் வரையும் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.

கந்தளாயில் உள்ள பொது இடங்களான அனைத்து வங்கிகள், சந்தை கட்டிடத் தொகுதி,மருந்தகங்கள், பொருட்கள் கொள்வனவு செய்யும் மொத்த வியாபார நிலையங்கள் அனைத்திலும் கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு நிறங்களிலும் கோடுகள் வரையப்பட்டன.

இதில் சிவில் பாதுகாப்பு பிராந்திய உயர் அதிகாரிகள், இளைஞர்களும் கலந்து கொண்டார்கள்.



-திருகோணமலை நிருபர் பாருக்-

Post a Comment

Previous Post Next Post