வியட்நாமில் ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து தவிக்கும் ஏழைகளுக்காக அரிசி ஏ.டி.எம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் வியட்நாமில் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்புகள் ஏதுமில்லை. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் வேலை இழந்து தவிக்கும் தினக்கூலி பணியாளர்கள் ஒருவேளை உணவுக்கே திண்டாடுகின்றனர்.
அவர்களுக்காக அரிசி ஏடிஎம் தொடங்கப்பட்டுள்ளது. இலவசமாக வழங்கப்படும் இந்த அரிசியை வாங்க வரிசையில் நிற்பவர்கள் 6 அடி இடைவேளை விட்டு நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஹோ சீ மின் நகரத்தில் மட்டும் அரிசி ஏடிஎம் 24 மணிநேரமும் செயல்படுகிறது.
மற்ற பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 ஐந்து மணிவரை செயல்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒருவர் ஒன்றரை கிலோ அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரிசி ஏடிஎம்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
Post a Comment