தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டோரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

ADMIN
0

வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top