இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர் இந்தியாவில் இருந்து கடந்த 20 ஆம் திகதி வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (23) அதிகாலை உயிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது அறிந்ததே.
இவர் மாவத்தகம, பறகஹதெனிய, வேவுட பிரதேசத்தை சேர்ந்த M.F ரிபானா என மேலும் தெரிவிக்கப் படுகின்றது.
கணவருடன் இந்தியாவின் சென்னைக்கு கேன்சர் நோய்க்காக சிகிச்சை பெற சென்றவர் ஆவார்.
இலங்கை திரும்பிய போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டு ஐ.டி. எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 1 மணியளவில் இவரின் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாகவும் அதற்கு தற்போது தனிமைப்படுத்தல் இலுள்ள இவரின் கணவர் சுகாதார பாதுகாப்புடன் வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment