குருநாகல் தம்பதெனியவைச் சேர்ந்த க. பொ. த உயர் தரம் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவர் முஹமட் அப்கர் இன்று -23- நீர்கொழும்பு பலவத்துறைக் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தம்பதெனிய அல் ஹிஜ்ரா பாடசாலையில் கல்வி கற்று வரும் இவர் விடுமுறை காரணமாக வர்த்தக நடைவடிக்கைகளுக்காக சிறிய ரக லொரியில் உதவியாளராகச் சென்ற இவர் இன்று மாலை 3.00 மணி அளவில் பலவத்துறை கடலில் குளிக்கச் சென்ற சமயத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது உடல் 6.15 மணி அளவில் கண்டு பிடிக்கப்பட்டு நீர் கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவராவர். மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இக்பால் அலி
23-08-2020
Post a Comment