Top News

20வது திருத்தத்தம் தொடர்பில் உதயகம்மன்பில வெளியிட்ட தகவல்.


19வது திருத்தத்தில் உள்ள சாதகமான விடயங்களை நீக்கப்போவதில்லை என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களை அரசாங்கம் நீக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

19 வதுதிருத்தத்தை நீக்கும் குறுகிய கா நடவடிக்கைகக்கும் புதிய அரசமைப்பினை உருவாக்கும் நீண்ட கால நடவடிக்கைக்கும் நாங்கள் மக்களின் ஆணையை கோரினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப நாங்கள் செயற்படுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபதாவது திருத்தத்திற்கான நகல்வடிவை தயாரிப்பதற்கான காலஎல்லை எதுவும் வழங்கப்படவில்லை ஆனால் நகல்வடிவம் விரைவில் வெளியாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசமைப்பை உருவாக்குவது நீண்டகால எடுக்கும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நிச்சயமாக புதிய அரசமைப்பினை கொண்டுவருவவோம் ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post