இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் / சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும்,
இது தொடர்பான வழக்குகள் தீர்ப்பளிக்கப்பட சுமார் 10 முதல் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும், இதுபோன்ற வழக்குகளை தாமதமின்றி தீர்ப்பதற்கு தான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
நேற்று (17) மாலை நீதி அமைச்சில் நடைபெற்ற விழாவில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் காணி வழக்கு ஒன்றைத் தீர்ப்பதற்கு சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன என்றும், தனது சட்டத்தரணி தொழிலில் 25 ஆண்டுகளில் இந்த நாட்டு மக்கள் அனுபவித்த துன்பங்களை அவர் கண்டதாகவும் தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில், நாட்டின் மக்கள் அரசியலமைப்பால் நாட்டு மக்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் அவ்வாறன மக்கள் பாதிக்கப்படாத அரசியலமைப்பின் படியே செயல்படுவார்கள் என்றும் கூறினார்.