சகல அரசு பாடசாலைகளிலும் 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களுக்கான செல்லுப்படியாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்ட வவுச்சர்கள் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணத்தால் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு வவுச்சர்கள் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment